Thursday, November 17, 2011

புத்தியுள்ள நீதிபதி.....!!!

பழைய காலத்துல நடந்த சம்பவம் எங்க அப்பா அழகா விவரிச்சு சொல்லும்போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் மனசுக்கு, ஊரில் பெரியவரை ஒருத்தன் ஜாதி விரோதத்தால் வெட்டி கொலை செய்துவிட்டான்...

கொலையாளியையும் சந்தேகத்தில் போலீஸ் பிடித்துவிட்டாலும் ஆதாரம் இல்லை, கேஸ் கோர்ட்டுக்கு போனாலும், கொலை செய்த அருவாள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது, கொலையாளியோ அந்த அருவாள் என்னுடையது அல்ல என்று அடித்து சொல்லிவிடவே கேஸ் விவகாரம் நீண்டுகொண்டே போனது...


போலீஸ் எவ்வளவோ விசாரிச்சும் அவன் கொலை செய்ததற்கான ஆதாரம் கிடைக்கவே இல்லை, கொலை செய்தது அவன்தான் என நன்றாக தெரிஞ்சும் கொலையாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை ஆதாரம் இல்லையே...


எல்லாவற்றையும் பார்த்து, கணித்து, கவனித்து கொண்டிருந்தார் நீதிபதி, கடைசி வரையும் ஆதாரம் கிடைக்காததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சந்தேகப்பட்ட நபரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு சொன்னார்.



கொலையாளி மிகுந்த சந்தோசத்தோடு கிளம்பினான் பரிவாரத்தோடு, அப்போது திடீரென நீதிபதி சத்தமாக சொன்னார், அதான் கேஸ் முடிஞ்சி போச்சுல்ல அந்த அருவாள் யாருடையதோ அதை எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும், கொலையாளி ஓடிப்போயி அருவாளை எடுக்கவும், கொலையாளி வகையாக சிக்கிக்கொண்டான்.....!!!

அப்பா சொன்ன நீதி : தப்பு செய்தால் என்னதான் தகடுதத்தம் செய்தாலும், தண்டனை நிச்சயம் உண்டு...!!!

மனோ"தத்துவம் : சந்தனம் சுமக்கும் கழுதைக்கு சந்தனத்தின் மகிமை தெரியாது....!!!

35 comments:

  1. அண்ணே எதுக்கு இந்த போலீஸ் ... இவர்தான் அந்த கேச விசாரிச்சாரா ,,,???

    ReplyDelete
  2. நீதிபதி புத்தியுள்ளவர்தான் ...
    கொலையாளி நம்ம வடிவேலு மாதிரி தானே போய் சிக்கிட்டாரே .. அடிச்சி கேட்டாலும் சொல்லாம இருந்தவர் ... சின்ன பொறியில சிக்கிடாரே ..

    ReplyDelete
  3. ஜூப்பர் அண்ணே.. அதுலயும் தத்துவம் உண்மை தான்

    ReplyDelete
  4. அருமை வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .மனம் கொஞ்சம் உருகக் கவிதை காத்திருக்கு அதற்கும் உங்கள் தீர்ப்பை எழுதிவிடுங்கள்.....

    ReplyDelete
  5. ஏன் சகோ உங்கள் ஆக்கத்தின் மேல் ஓட்டுப்பட்டை ஏறி நிற்கின்றது?...

    ReplyDelete
  6. அண்ணே பின்னிட்டீங்க...இருந்தாலும் எதுக்கு இப்படி தத்துவத்துல திட்டிக்கிறீங்களோ தெரியல ஹிஹி!

    ReplyDelete
  7. இந்தக் கத்தியை எங்கயோ பார்த்தமாதிரியே இருக்கே..!!!! ஹா ..ஹா ..ஹா ...

    ReplyDelete
  8. இதே மாதிரி மரியாதை ராமன் கதைகள் படித்த நினைவும் வருகிறது... அருமை

    ReplyDelete
  9. கலக்கீட்டீஙக் பாஸ்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  10. மனோ,

    அறிவுக்கூர்மையும், நேர்மையும் மிக்க நீதிபதிகளும் இந்த பூமியில் வாழ்த்திருக்கிறார்கள் என்னும் அரிய செய்தி உங்களின் இப்பதிவின் மூலம் நிரூபனம் ஆகிறது.

    வருங்கால சந்ததிகளுக்கு வரலாற்றை பதிவு செய்து வரும் அண்ணன் மனோ வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  11. மக்கா அந்த கத்தி படம் நீங்க சொந்தமா எடுத்ததா? பயமா இருக்கு...


    நம்ம தளத்தில்:
    சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி

    ReplyDelete
  12. அண்ணாச்சி முதல் வணக்கம்
    ஆத்தி...அருவா பயமால்ல இருக்கு...

    ReplyDelete
  13. ரொம்ப நாள் கழிச்சு மனோ தத்துவம் வந்துருக்கு மக்களே...
    வந்ததும் சந்தானம் மனக்குதய்யா.....

    ReplyDelete
  14. நீதிபதிக்கும் சொன்ன நீதிக்கும் ஒரு சபாஷ்....

    ReplyDelete
  15. படத்திற்கு கதையா..பலே..தத்துவமும்,நீதியும் நன்றாகத்தான் உள்ளன.

    ReplyDelete
  16. அசத்தல் பதிவு
    படங்கள்தான் பயமுறுத்துது
    (விஜயகாந்தையும் சேர்த்துத்தான்)
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. பதிவு முழுக்க நீங்க உபயோகிக்கும் ஆயுதங்களாகவே இருக்கே.

    ReplyDelete
  18. பதிவு ஆரம்பத்திலேயே அருவா படம் போட்டுப் பயமுறுத்தினாலும் ஒரு நல்ல கதை சொன்னீங்க!

    ReplyDelete
  19. Kathai arumai.. neenga sonna vitham romba arumai.....

    ReplyDelete
  20. அருமையான நீதிக்கதை.
    உங்கள் தந்தை சொன்ன நீதி அருமை

    ReplyDelete
  21. மிக அருமையாக இருந்தது நீதிக்கதையும் தத்துவமும்

    ReplyDelete
  22. இதில் இருந்து அறிவது கொலையே செஞ்சாலும் ஆதாரம் இல்லாம செஞ்சா தப்பிச்சுக்கலாம் அப்படியா மனோ?

    ReplyDelete
  23. அழகான நீதி அருமையாக சொல்லி இருக்கீங்க நண்பரே

    ReplyDelete
  24. அப்பா சொன்ன நீதி அருமை சார்...

    ReplyDelete
  25. அப்பா சொன்ன அருமையான கதை.

    ReplyDelete
  26. அதிலும் அந்த ”மனோ”தத்துவம் சூப்பர்.

    ReplyDelete
  27. சுவாமி திவானந்தா உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  28. சுவாமி திவானந்தா உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். // அரிவாளோடா ?? மனோ escaaaaaaaap !!

    ReplyDelete
  29. தம்பி லேப்[டாப் மனோ, விக்கி தக்காளி ஒரு மேட்டர் சொன்னான் உன்னை பற்றி , அது உண்மையா? ஹி ஹி

    ReplyDelete
  30. நல்ல டெக்னிக். இது உண்மை கதையா என்ன?

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!