Friday, February 3, 2012

தீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....!!!

தீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் செய்தி சானல் செய்தி வெளியிட்டு உள்ளது [[நாசமா போக]]

ஏர்போர்ட்டுக்கு வெளியே வந்ததும் என்னை போட்டு தள்ள விக்கி என்ற பக்கி பிளான் பண்ணுனதை ஆபீசர் உளவுத்துறை மூலம் அறிந்து அந்த நாதாரி ராஸ்கலின் முயற்சியை முறியடித்தார் என்ற செய்தி பன்னிகுட்டி பிளாக் மூலம் தெரிய வருகிறது....!!!

மும்பை ஏர்போர்ட் மானேஜர் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு போய்விட்டார் [[ஓடிவிட்டார் என்று படிக்கவும்]]  நாஞ்சில்மனோ வந்த விமான மாலுமி விமானத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி.....

நாஞ்சில்மனோ'வுடன் யாத்தரை செய்த பயணிகள் எல்லாரும் மூர்ச்சையாகி அவசராமாக ஆம்புலன்ஸ் வரவச்சும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூர்ச்சை ஆகிவிட்டார் நாஞ்சிலாரை பார்த்து....

விமான நிலைய கிளீனர்கள் எல்லாம் துடப்பகட்டை இத்தியதிகளுடன் தயார் நிலையில் காரணம் மும்பை நாதாரி நண்பனுங்க என்னை பழி வாங்கனும்னு ஏர்போர்ல வச்ச பிளக்ஸ் போர்ட்...

பவுல்தாக்கரே கோவணம் கட்டி போராட்டம்....[எதுக்குகுலேய் ராஸ்கல், நான் குருணாநிதின்னு நினைச்சியா? நான் ஒரிஜினல் தமிழம்லேய் கொய்யால மும்பைன்னாலும் பிச்சிபுடுவேன் பிச்சி, சிபி உயிரை பணயம் வச்சாவது போட்டு தள்ளிப்புடுவேன் ]]

எலேய் நாயே நீ உன் வீட்டம்மாவை பார்க்கத்தான் ரெடி ஆகி கடைசியா கவிதைன்னு ஒரு கருமத்தை பதிவுன்னு போட்டே எங்களுக்கு தெரியும்டி...[[ சிபி அண்ணே நீ மனசுல கருமுறது நல்லா தெரியுதிடி பிச்சிபுடுவேன் ராஸ்கல்]]

என் உயிரிலும் மேலான நண்பர்களே, தோழிகளே, என் உயிர் தங்கைகளே, பதினெட்டாவது மாடியில் இருப்பதாலும் கீழே அமெரிக்கன் நேவி கப்பல் தளம் இருப்பதாலும் பதிவும் எழுத முடியவில்லை, உங்கள் பிளாக்கும் வர முடியவில்லை மன்னிக்கவும், காரணம் அமெரிக்கன் ராணுவம் நெட் கனக்சனை கட் செய்து வைத்து இருப்பார்களாம், அதான் அப்பவே சொன்னேன் விக்கி'கிட்டே டேய் நாயே அமெரிக்கா'காரன்கிட்டே வச்சிக்காதேன்னு கேட்டானா கொய்யால...

இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்கோங்க அருவா பொளந்துகிட்டு வந்து உங்கள் காலடியில் நன்றியுடன் கிடக்கும் நன்றி....

டிஸ்கி : ஆண்டவா மும்பை ஏர்போர்ட் என்ன ஆகப்போகுதோ....? 

டிஸ்கி : எலேய் நான் இல்லாத மும்பை எப்பிடிலேய் இருக்கு..? 
அண்ணே இதுவரை நல்லாத்தான் இருந்துச்சு இனி நாரிப்போயிரும், நம்ம கல்பரக்ஷா பாரும் [பார்] பார் முதலாளி திருப்பதி ஓடிட்டான்னு இப்பமே நியூஸ் வந்துருச்சு.....

நமக்கு இதெல்லாம் புதுசா என்ன விடுறா, ஒயிட் பக்கார்டி இப்பமே ஆர்டர் பண்ணி வெச்சிரு இதோ வந்துட்டேன், அப்புறம் ஜெர்மன் கார்னு ஒரு டப்பா காரை வச்சிருந்தியே அதை ஏர்போர்ட் அனுப்பிரு டிக்கியை பதம் பார்த்து அனுப்புறேன் சரியாடா...?
அண்ணே நீங்க உருப்படவே மாட்டீங்க...
ஹி ஹி...

ஸ்பெஷல் டிஸ்கி : ஆம் நண்பர்களே வேலை கொஞ்சம் பிரச்சினையாக இருப்பதாலும், என் மனைவி குழந்தைகளை பார்க்க மனசு ஏங்குவதாலும், நான்கே மாசத்தில் மும்பை வருகிறேன், அடுத்த பத்தாவது நாளில் தமிழ்நாடு வருகிறேன், என் உயிர் நண்பர்களை சந்திக்க காட் இஸ் கிரேட்...!!!

டிஸ்கி : கவுசல்யா சொல்வாங்க, மனோ நீங்க ஆபீசரை சந்திச்சிங்கன்னா ஆபீசருக்கு பத்து வயசு குறஞ்சிரும்னு அவளவு சந்தோஷமா என்னை பற்றி பேசுவார் போல, வாரேன் ஆபீசர் விஜயனையும் கூட்டிட்டு, உங்களுக்கு இருவது வயசு குறைஞ்சிடும்...!!!

26 comments:

! சிவகுமார் ! said...

சென்னை வராம போனீங்க...கேப்டனை விட்டு சொளட்டி சொளட்டி அடிப்பேன்.

Avargal Unmaigal said...

மனோ நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழவும் எல்லாம் நல்லபடியாக நடக்கவும் எனது வாழ்த்துக்கள் . God Bless You!!!!!

விக்கியுலகம் said...

யோவ் எங்கையா போய் தொலைஞ்சே...இவரு பெரிய அப்பப்பா டக்கரு...இவருக்கு போன பண்ணா என்ன என்னமோ கேக்குது...இருடி வீட்ல போட்டு கொடுத்திடுறேன் ஹிஹி!

மகேந்திரன் said...

வாங்க வாங்க
மக்களே...
விடுமுறை இன்புற அமைந்திட
இறைவன் அருள்புரியட்டும்....

Ramani said...

தங்கள் இந்தியப் பயணத்தில்
மதுரை உண்டா ?

வாங்க வாங்க
விடுமுறை இன்புற அமைந்திட
வாழ்த்துக்கள் .
.

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் தலைப்பை பார்த்து ஏதோ செய்தி என்று நினைத்து வந்தேன்
ஹி.ஹி.ஹி.ஹி...உங்களை வைத்து நகைச்சுவையாக எழுதியிருக்கின்றீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் வரவு நல்வரவு ஆகுக!

veedu said...

//நாஞ்சில்மனோ'வுடன் யாத்தரை செய்த பயணிகள் எல்லாரும் மூர்ச்சையாகி அவசராமாக ஆம்புலன்ஸ் வரவச்சும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூர்ச்சை ஆகிவிட்டார் நாஞ்சிலாரை பார்த்து....//

ஏன் மக்கா பல மாதமா குளிக்கவேயில்லையா?

எனக்கு பிடித்தவை said...

வாங்க அண்ணே!!!!! வாங்க!!... உங்க பதிவுகல படிக்காம மனசே சரி இல்லை போங்க,.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஸ்பெஷல் டிஸ்கி : ஆம் நண்பர்களே வேலை கொஞ்சம் பிரச்சினையாக இருப்பதாலும்,//////

ங்கொய்யால இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது....... ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஏர்போர்ட்டுக்கு வெளியே வந்ததும் என்னை போட்டு தள்ள விக்கி என்ற பக்கி பிளான் பண்ணுனதை ஆபீசர் உளவுத்துறை மூலம் அறிந்து அந்த நாதாரி ராஸ்கலின் முயற்சியை முறியடித்தார் என்ற செய்தி பன்னிகுட்டி பிளாக் மூலம் தெரிய வருகிறது....!!!////


நாசமா போச்சி, சும்மா கெடக்கும் ப்ளாக்குக்கு வேல வந்துடும் போல இருக்கே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////என் உயிரிலும் மேலான நண்பர்களே, தோழிகளே, என் உயிர் தங்கைகளே, பதினெட்டாவது மாடியில் இருப்பதாலும் கீழே அமெரிக்கன் நேவி கப்பல் தளம் இருப்பதாலும் பதிவும் எழுத முடியவில்லை/////

யோவ் என்னய்யா அமேரிக்கன் நேவி, ஆப்பிரிக்கன் காட்டுப்பன்னின்னு கலர் கலரா ரீலு விடுற?

FOOD NELLAI said...

நெல்லை உள்ளங்கள் நீங்கள் வரும்நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும்.

FOOD NELLAI said...

எல்லாத்திரட்டிகளிலும் இணைப்பு கொடுத்தாச்சு.

FOOD NELLAI said...

விரைவில் வேலை உத்தரவு கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

FOOD NELLAI said...

வீட்டிலுள்ள சொந்தங்களை விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

siva sankar said...

WELCOME WITH VANAKKAM....
WELCOME WITH VANAKKAM....
WELCOME WITH VANAKKAM....

ரமேஷ் வெங்கடபதி said...

தாங்கள் தமிழகம் வரும் நாளை பொதுவிடுமுறை விட்டு கொண்டாட பதிவர்கள் முடிவு!

NAAI-NAKKS said...

ஹாய் மனோ...
இப்பவே சொல்லிட்டேன்....
நான் பாரின் சரக்கு அடிக்கிரதில்லை...

ஹி..ஹி,,,ஹி,,,,

ஆமினா said...

இப்பவே பேனர் கட்டி வச்சுடுறேன் மனோ :-)

ஆமினா said...

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்

ராஜி said...

என்னை பார்க்காம போனீங்க...., தூங்கும்போது எதிர்க்க நிக்குறவங்க தெரியாம போகனும்ன்னு சாபம் உட்டுடுவேன்

பாலா said...

பாலிவுட் நடிகைகள் மும்பை ஏர்போர்ட்டுக்கு குவிகிறார்களாமே? அத நீங்க சொல்லவே இல்லியே?

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் மனோ.
நல்வரவு.

தனிமரம் said...

அண்ணச்சி போனமாசம்  சொல்லி இருந்தா இந்த தனிமரமும் மீனம்பாக்கத்தில் அண்ணாச்சிக்கு வரவேற்பு மேளம் தாளம் தப்பு காவடி எடுத்து  வடபழனியில் ஒரு ரூம் போட்டு ரைஜீன் பாட்டிலுடன் கொண்டாட்டம் போட்டு இருக்குமே! மக்கா என்னையும் தவிக்க விட்டுட்டு டெல்லி பயணமா போய் வா மக்கா அடுத்த பாடல் அண்ணாச்சிக்குத்தான்.ஹீ ஹீ

RAMVI said...

வாங்க! வெல்கம்!

பதிவைவிட டிஸ்கி பெரிசா இருக்கே!!

நம்ம பதிவுகள் தான்! ஆனாலும் உங்கள் பார்வைக்குத் தான்!