Wednesday, December 18, 2013

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....!

வாழ்க்கையில் நாம் நினைப்பது சில நடக்காது என்பது மறுபடியும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது என் வாழ்கையில்...!


மும்பையில் இருந்து [[ஏன் பஹ்ரைனில் இருந்தும்]] ஆசையாசையாக நண்பர்களையும், என் அம்மாவையும் சந்திக்க சென்ற எனக்கு ஏமாற்றமாகவே திரும்ப வேண்டிய சூழ்நிலை.
[[எங்கள் ஊர் மருந்துவாழ் மலை]]

இருந்தாலும் சில உயிர் நண்பர்களை சந்தித்தது மனசுக்கு ஆறுதலாக இருந்தாலும், பார்க்காமல் இருந்த நண்பர்களை பார்க்க முடியாமல் திரும்பியது, நான் கூட ஏன் ஆபீசர், விஜயன் கூட எதிர்பார்க்காத ஒன்று என்றால் அது மிகையில்லை.
[[எனது பால்ய நண்பன் ராஜகுமார் மருந்துவாழ் மலை மற்றும் பொத்தயடி டாஸ்மாக் கடை அருகில்]]

மும்பை டூ நாகர்கோவில் டூ நெல்லை டூ மேக்கரை டூ சென்னை டூ மும்பை என்று இருந்த புரோகிராம், காலையில் விரைவாக எழும்பி பெட்டி கட்டி ரெடியாக வைத்துவிட்டு, டிபன் சாப்பிட்டு, என்னடா இன்னும் ஆபீசர் போன் வரலையே என்று காத்திருந்தும் ஆபீசர் போன் வரவில்லை.

விஜயனுக்கு போன் செய்தேன், இதோ இப்போ ரெடியாகி விடும் ரெடியாக இருங்கள் என்றார், நானும் உற்சாகமாக அம்மாவிடம் பிளாக் காபி போட்டு தாம்மா என்று வாசல் படியில் உட்கார்ந்து இருந்தேன்.

விஜயன் போன்.....

"மனோ, ஆபீசர் போன் செய்தாரா ?"

"இல்லையே என்னாச்சு ?"

"மேக்கரையில் புக் செய்து வைத்திருந்த ரூம், அதில் தங்கி இருந்தவர்கள் இன்னும் ரூமை காலி செய்யவில்லையாம்"

"ம்ம்ம்ம்"
[[நம்ம ஆபீசர் சங்கரலிங்கம்]]

"இன்னும் அதற்காகத்தான் ஆபீசர் வெயிட் செய்துட்டு இருக்கார் நீங்களும் ஒரு ஒன் ஹவர் வெயிட் பண்ணுங்க"

"ஓகே"

எப்படியும் ரெடியாகி விடும் என்று நினைத்து மறுபடியும் ஒரு முறை பெட்டியை செக் செய்து பார்த்துக் கொண்டேன்.

கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் விஜயன் போன்..."மனோ, மேக்கரையில் ரூம் கிடைக்கவில்லை அதனால் திருவனந்தபுரம் போகலாம் என்று சுதன் ஆபீசரிடம் ஐடியா சொல்லி இருக்கார் இருந்தாலும் அவர்கள் கிளம்பும் போது சொல்கிறேன்" என்றார்

அப்பவே பொடீர்னு மனசுக்குள்ளே ஒரு சத்தம்....

நண்பன் ராஜகுமாரை அழைத்து, "வாய்யா விஜயனிடம் இருந்து போன் வரும் வரை எங்கேயாவது சுற்றலாம்" என்றேன்

பொத்தயடி மலையடிவாரம் போகும் போது விஜயனின் போன்..."மனோ, ஆபீசரும், சுதனும், செட்டியார் கவுதமும் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், திருவனந்தபுரம் போவதற்கு" என்றார்

என்னடா வடக்கே நோக்கி போகவேண்டிய ஆளுங்க [[வண்டி]]மேற்கே நோக்கி வருகிறார்களே என்று நினைத்து....
[[தம்பானூர் [[திருவனந்தபுரம்]] நோக்கி விரையும் கார்]]

ராஜகுமாரிடம் "எட்றா வண்டியை டாஸ்மாக் நோக்கி" என்றேன்......

தொடரும்.....

டிஸ்கி : சென்னை நண்பர்கள் மன்னிச்சு........ மன்னிச்சு...... மன்னிச்சு.... உங்களை இந்த தடவையும் பார்க்க எனக்கு "கொடுப்பினை இல்லாமல் போனது" என்பதுதான் உண்மை.


16 comments:

  1. ராஜகுமாரிடம் "எட்றா வண்டியை டாஸ்மாக் நோக்கி" என்றேன்....../// அப்ப ஆரம்பித்ததுதான்.....கடைசி வரை ஒரே வழுக்கல்.

    ReplyDelete
  2. ரைட்டு....

    இன்னும் என்னன்ன கதைகள் வெளியில வரப்போகுதோ பார்க்கலாம்....

    மன்னா மறைக்காம சொல்லனும்...

    ReplyDelete
  3. பச்சை புள்ளைங்க தாகத்திற்கு தண்ணி வாங்க டாஸ்மாக் போயிருப்பீங்க. அவ்வளவுதானே கண்ட கண்ட இடத்தில் தண்ணி குடிச்சா காலரா டைபாய்டு வந்துருமுன்னு நல்லாவே தெரிஞ்ச்சு வைச்சிருங்கப்பா..

    எஞ்சாய் மக்காஸ் life is short

    ReplyDelete
  4. சென்னை நண்பர்கள் மன்னிச்சு........ மன்னிச்சு...... மன்னிச்சு.... உங்களை இந்த தடவையும் பார்க்க எனக்கு "கொடுப்பினை இல்லாமல் போனது" என்பதுதான் உண்மை.
    >>
    சென்னை பதிவர்கள் உங்க அருவாவிலிருந்து தப்பிட்டாங்கன்னு சொல்லுங்க

    ReplyDelete
  5. //பார்க்காமல் இருந்த நண்பர்களை பார்க்க முடியாமல் திரும்பியது, நான் கூட ஏன் ஆபீசர், விஜயன் கூட எதிர்பார்க்காத ஒன்று என்றால் அது மிகையில்லை.//உங்களது மன நிலையை புரிந்து கொள்ள முடிகிறது...வருந்துகிறோம்...with Gops...

    ReplyDelete
  6. பயண கட்டுரை ??????

    ReplyDelete
  7. ஊர்பக்கம்தான் வர முடியாது . ஒரு போன் செய்ய கூட நேரம் இல்லையா ?

    ReplyDelete
  8. நேரமின்மையால் தாங்கள் கொண்ட
    மனக் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  9. உங்களைக் காண அதிக ஆவலுடன் இருந்தேன்... மும்பைக்கு பிளைட் அடுத்து எப்போன்னு பாக்கறேன்...

    ReplyDelete
  10. தண்ணி தானா எங்கேயும் எப்போதும்

    ReplyDelete
  11. ஆரம்பம் டாஸ்மாக்கில்... இனி அதகளம்தானா அண்ணா...

    ReplyDelete
  12. அடடா.... பல சமயம் நாம் நினைத்தபடி நடப்பதில்லை மனோ. தில்லி பக்கம் வந்தால் சொல்லுங்க!

    ReplyDelete
  13. எண்ணமெல்லாம் இன்பமது தளைத்தோங்க
    வண்ண மயமாய் வாழ்வது இனித்திடவே
    வருகின்ற புத்தாண்டில் நீங்களும் உங்கள்
    குடும்பத்தினரும் மகிழ்வோடு திளைத்திருக்க
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!